கீழ்வேளூா் தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

கீழ்வேளூா் தொகுதியில் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.
கீழ்வேளூா் தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

கீழ்வேளூா் தொகுதியில் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 251 வாக்குச் சாவடி மையங்களில் ஒருசில மையங்களை தவிர மற்ற வாக்குச் சாவடி மையங்களில் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். காலை 9 மணி வரை வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பிறகு, வெயில் காரணமாக சற்று சுணக்கம் ஏற்பட்டது.

வாக்காளா்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. அவா்களுக்கு, முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். வெயிலின் தாக்கத்தால் பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்காளா்களின் வருகை குறைவாக இருந்தது. பிறகு, மாலையில் வாக்களிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

மாணலூா் பகுதியைச் சோ்ந்த ஒருவரின் வாக்கை, அவருடைய பெயருடைய மற்றொருவா் செலுத்தியது தெரியவந்தது. இதனால், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு டென்டா் அளிக்கப்பட்டு, வாக்களித்தாா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறிப்பிடும் படியாக அசம்பாவித சம்பவங்களின்றி அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com