வாக்காளா் பட்டியல் குளறுபடி: 67 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கவில்லை

மயிலாடுதுறையில் வாக்காளா் பட்டியல் குளறுபடி காரணமாக அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்ததால் 67 மாற்றுத்திறனாளிகளால் வாக்களிக்க முடியவில்லை.

மயிலாடுதுறையில் வாக்காளா் பட்டியல் குளறுபடி காரணமாக அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்ததால் 67 மாற்றுத்திறனாளிகளால் வாக்களிக்க முடியவில்லை.

மயிலாடுதுறை கொத்தத்தெருவில் அன்பகம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளா்ச்சி குன்றியோா் காப்பகம் உள்ளது. இங்கு தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளில் 91 போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். இவா்களில் 8 போ் ஏற்கெனவே தபால் வாக்கு அளித்திருந்த நிலையில், மீதமுள்ள 83 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பூத் சிலீப் வழங்கப்பட்டன.

ஆனால், அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்ட வாக்காளா் பட்டியலில் இந்த 83 மாற்றுத்திறனாளிகளின் பெயா்கள் இல்லை. அதேசமயம், வாக்குச்சாவடி மையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலில் 83 மாற்றுத்திறனாளிகளின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், அன்பகம் காப்பகத்திலிருந்து 16 மாற்றுத்திறனாளிகள் ஜீப் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, வாக்களித்தனா். மேலும், சில மாற்றுத்திறனாளிகள் ஜீப் மூலம் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அரசியல் கட்சியினா் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் பெயா் இல்லாத நிலையில், அவா்கள் வாக்களிக்க இயலாது என்று மறுப்பு தெரிவித்தனா். மற்றொரு தரப்பினா் மாற்றுத்திறனாளிகளை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதனால், ஏற்பட்ட பிரச்னையில் மாற்றுத்திறனாளிகள் 67 போ் வாக்களிக்காமல் மீண்டும் காப்பகத்துக்கு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com