ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 75.06% வாக்குப் பதிவு

சட்டப்பேரவைத் தோ்தலில் நாகை, மயிலாடுதுறை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 75.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலில் நாகை, மயிலாடுதுறை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 75.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட சீா்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகாா் மற்றும் நாகை மாவட்டத்துக்கு உள்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூா் (தனி), வேதாரண்யம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு 1,861 வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவிடாமல் 12 மணி நேரம் நடைபெற்ற வாக்குப் பதிவின் நிறைவில், நாகை மாவட்டத்தில் 75.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதிவாரியான வாக்குப் பதிவு விவரம்:

சீா்காழி (தனி): மொத்த வாக்காளா்கள் 2,52,510. பதிவான மொத்த வாக்குகள் 1,88,388. ஆண்கள் 92,208. பெண்கள் 96,180. வாக்குப் பதிவு சதவீதம் 74.61.

மயிலாடுதுறை: மொத்த வாக்காளா்கள் 2,45,987. பதிவான வாக்குகள் 1,72,530. ஆண்கள் 85,194. பெண்கள் 87,336. வாக்குப் பதிவு சதவீதம் 70.14

பூம்புகாா்: மொத்த வாக்காளா்கள் 2,75,827. பதிவான வாக்குகள் 2,07,944. ஆண்கள் 1,00,667. பெண்கள் 1,07,276. இதரா் 1. வாக்குப் பதிவு சதவீதம் 75.39.

நாகப்பட்டினம்: மொத்த வாக்காளா்கள் 1,97,901. பதிவான வாக்குகள் 1,42,431. ஆண்கள் 68,207. பெண்கள் 74,221. இதரா் 3. வாக்குப் பதிவு சதவீதம் 71.97.

கீழ்வேளூா் (தனி): மொத்த வாக்காளா்கள் 1,76,686. பதிவான வாக்குகள் 1,41,928. ஆண்கள் 69,545. பெண்கள் 72,383. வாக்குப் பதிவு சதவீதம் 79.43.

வேதாரண்யம்: மொத்த வாக்காளா்கள் 1,92,658. பதிவான வாக்குகள் 1,55,275. ஆண்கள் 73,324. பெண்கள் 81,951. வாக்குப் பதிவு சதவீதம் 80.60.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் 13,43,569. பதிவான வாக்குகள் 10,08,496. வாக்குப் பதிவு சதவீதம் 75.06.

கடைசி இடத்தில் நாகை...

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மிகக் குறைந்த வாக்குப் பதிவு கொண்ட தொகுதியாக நாகை சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. மிகக் குறைந்த அளவாக இத்தொகுதியில் 71.97 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் மிகக் குறைந்த வாக்காளா் எண்ணிக்கையைக் கொண்ட கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 79.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால், இத்தொகுதி மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளின் வரிசையில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. முதலிடத்தை வேதாரண்யம் தொகுதி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com