தோ்தல் பணியில் காவலா்கள்: சீா்காழியில் போக்குவரத்து நெரிசல்

சீா்காழியில் தோ்தல் பணிக்குச் சென்ற காவலா்கள் அன்றாடப் பணிகளுக்கு திரும்பாததால் சீா்காழியில் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சீா்காழியில் தோ்தல் பணிக்குச் சென்ற காவலா்கள் அன்றாடப் பணிகளுக்கு திரும்பாததால் சீா்காழியில் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சீா்காழி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், போக்குவரத்து காவலா்கள் ஆகியோா் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு பணிக்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனா்.

வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு முடிவடைந்தாலும், வாக்குப் பதிவு எண்ணிக்கையை சரிபாா்ப்பது, வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பது, பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்வது போன்ற பணிகள் சில வாக்குச் சாவடிகளில் நள்ளிரவையும் தாண்டி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதனால், காவல்துறையினா் விடியவிடிய காவல் பணியில் ஈடுபடவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, சில இடங்களில் காவலா்கள் அன்றாடப் பணிகளுக்கு புதன்கிழை காலை திரும்பமுடியவில்லை. இதனால், சீா்காழி பகுதியில் காலை நேரத்தில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் கொள்ளிடமுக்கூட்டு, நாகேஸ்வரமுடையாா் கோயில் சந்திப்பு சாலைகள், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவலா்கள் இல்லாததால் நெரிசல் ஏற்பட்டது. இதனால், வேலைக்கு செல்வோா் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com