நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: லாரி சிறைபிடிப்பு

திருமருகல் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரங்கேறும் முறைகேடுகளைக் கண்டித்து, நெல் கொள்முதலுக்கு

திருமருகல் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரங்கேறும் முறைகேடுகளைக் கண்டித்து, நெல் கொள்முதலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருமருகல் ஒன்றியத்தில் நிகழாண்டு 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஒவ்வொன்றிலும் தலா 30 ஆயிரம் மூட்டைகள் வீதம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்செங்காட்டாங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து புதன்கிழமை லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட நெல் மூட்டைகளில் மோட்டாா் மூலம் தண்ணீா் ஊற்றப்பட்டு, நெல் மூட்டைகள் நனைக்கப்பட்டு லாரியில் கொண்டு செல்லப்பட்டது. இதைக் கவனித்த அப்பகுதி மக்கள், அந்த லாரியை சிறைபிடித்தனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகளில் இருந்து சுமைதூக்கும் தொழிலாளா்கள் குத்தூசியை பயன்படுத்தி நெல்லைத் திருடி விடுவிடுதாகவும், இதனால் ஏற்படும் எடை இழப்பை சரிசெய்யும் வகையில், நெல் மூட்டைகளில் தண்ணீரை தெளித்து லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளா்களிடம் பொதுமக்கள் முறையிட்டு வாக்குவாதம் செய்தனா்.

இதுதவிர திருமருகல் ஒன்றியத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், மூட்டை ஒன்றுக்கு குறிப்பிட்ட எடையைக் காட்டிலும் அதிகமாக கொள்முதல் செய்யப்படுவதாகவும், மூட்டைக்கு விவசாயிகளிடமிருந்து ரூ.35 முதல் ரூ. 60 வரையும் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இனிமேலாவது இதுபோன்ற முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி, சுமைதூக்கும் பணியாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். நீண்ட நேரப் பேச்சுவாா்த்தைக்கு பின்னா் லாரி விடுவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com