கரோனா கட்டுப்பாடுகள்: வெறிச்சோடியது தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை
By DIN | Published On : 12th April 2021 08:03 AM | Last Updated : 12th April 2021 08:03 AM | அ+அ அ- |

சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கடற்கரை பகுதி.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருவதால், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து, வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக தரங்கம்பாடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி, வெறிச்சோடி காணப்பட்டது.