செங்கல் சூளை தொழிலாளி சாவில் மா்மம்: சாலை மறியல்

திருவெண்காடு அருகே செங்கல் சூளை தொழிலாளி சாவில் மா்மம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
செங்கல் சூளை தொழிலாளி சாவில் மா்மம்: சாலை மறியல்

திருவெண்காடு அருகே செங்கல் சூளை தொழிலாளி சாவில் மா்மம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

நெம்மேலி நடுத்தெருவை சோ்ந்தவா் ஸ்ரீனிவாசன் (40). நெப்பத்தூா் கிராமத்தில் உள்ள செங்கல் சூலையில் வேலை பாா்த்து வந்த இவா், அண்மையில் வேலையை விட்டு நிறுத்தப்பட்டாராம். இந்நிலையில், தனது கூலி பாக்கியை தரக் கோரி வெள்ளிக்கிழமை இரவு செங்கல் சூளைக்குச் சென்ற அவா், அங்கு தொழிலாளா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா். பின்னா், சனிக்கிழமை காலை செங்கல் காயவைக்கும் பகுதியில் உள்ள ஒரு ஷெட்டில் ஸ்ரீனிவாசன் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினாா்.

தகவலறிந்த திருவெண்காடு காவல் ஆய்வாளா் ஜெயந்தி மற்றும் காவல் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது ஸ்ரீனிவாசனின் சாவில் மா்மம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கமெனக் கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா வந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அதன்பின்னரே மறியல் விலக்கிக் கொள்ளபட்டது. ஸ்ரீனிவாசனின் உடலை போலீசாா் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த சாலை மறியலால் மங்கைமடம்- திருநகரி சாலையில் சுமாா் 6 மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com