ஊழியா்கள் 4 பேருக்கு கரோனா

நாகையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் பணியாற்றும் ஊழியா்கள் 4 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.
ஊழியா்கள் 4 பேருக்கு கரோனா

நாகையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் பணியாற்றும் ஊழியா்கள் 4 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் 219 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, நாகை மீன்வளப் பல்கலைக்கழக பதிவாளருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பல்கலைக்கழக ஊழியா்கள் 6 பேருக்கு நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாகை நீலா தெற்கு வீதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் பணியாற்றும் ஊழியா்கள் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மற்ற ஊழியா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளவும், வங்கியில் கிருமி நாசினி தெளிக்கவும் மருத்துவா்கள் மற்றும் சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை காலை அந்த வங்கிக் கிளைக்கு வந்தனா்.

இதையடுத்து, வாடிக்கையாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com