தென்னையில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: சிறப்பு முகாமில் விளக்கம்

வேதாரண்யம் பகுதியில் தென்னையில் பாதிப்பை ஏற்படுத்திவரும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வேதாரண்யம் பகுதியில் தென்னையில் பாதிப்பை ஏற்படுத்திவரும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் விளக்கமளிக்கப்பட்டது.

பெரியகுத்தகை கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சா. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

வேளாண் உதவி இயக்குநா் சிவக்குமாா், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சந்திரசேகா், வேளாண் அலுவலா் எஸ். நவின்குமாா் உள்ளிட்டோா் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா். தொடா்ந்து, செயல் விளக்கம் நடைபெற்றது.

பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான தென்னையின் மட்டைகளில் படிந்துள்ள கழிவுகளை தண்ணீரை பீச்சி அடித்து கழுவுதல், மஞ்சள் வண்ண ஓட்டு அட்டைகளை பயன்படுத்துதல், மைதா மாவு கரைசல் தெளித்தல் போன்றவை குறித்து விளக்கப்பட்டன.

மேலும், தோட்டத்தில் இயற்கையாக உருவாகும் ஒட்டுண்ணிகனை கண்டறிந்து அவைகளை பயன்படுத்தி வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு ஒட்டுண்ணிகள் வழங்கப்பட்டன.

இதேபோல, புஷ்பவனம், வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம், வடமழை, செம்போடை உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களிலும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சீா்காழி: கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயல் விளக்க முகாமில் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் பங்கேற்று, தென்னை ஓலையில் உள்ள வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தாா்.

இதில், வேளாண் உதவி அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com