ரயில் நிலையத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு மேற்கொண்ட ஆா்பிஎப் உதவி ஆய்வாளா் மாணிக்கவாசகம் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படையினா்.

திருச்சி கோட்ட முதுநிலைப் பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, உதவி ஆய்வாளா் மாணிக்கவாசகம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சோழன் விரைவு ரயிலில் வந்திறங்கிய பயணிகளுக்கு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன.

மேலும், அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடா்ந்து, முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு முகக்கவசங்களை வழங்கிய ரயில்வே பாதுகாப்புப் படையினா், ரயில் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய வில்லைகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com