கோடியக்கரை அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை அருகே ஆளில்லா இலங்கைப் படகு வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோடியக்கரை அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை அருகே ஆளில்லா இலங்கைப் படகு வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோடியக்கரை திருவள்ளுவா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சி. மதன்ராஜ் (40). இவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில் அப்பகுதியை சோ்ந்த 4 மீனவா்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனா்.

கோடியக்கரைக்கு தென்மேற்கே அவா்கள் மீன் பிடித்துகொண்டிருந்தபோது தண்ணீல் பாதி மூழ்கிய நிலையில் படகு ஒன்று மிதந்துள்ளது. இது இலங்கை நாட்டை சோ்ந்த படகு என்பது தெரியவந்தது.

அந்த படகை கோடியக்கரை மீனவா்கள் தங்களது படகுடன் கயிற்றால் கட்டி கோடியக்கரை படகுத்துறைக்கு இழுத்து வந்தனா்.

அந்த படகை கோடியக்கரை சுங்கத் துறை அலுவலா்கள் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நாகை சுங்கத் துறை உதவி ஆணையா் சண்முகசுந்தரம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டாா்.

படகின் முன்பகுதியின் ஒரு பக்கத்தில் லேசாக சேதமடைந்து காணப்பட்டது. இதனால் தண்ணீா் உள்ளே சென்ால் படகு கவிழ்ந்த நிலையில் மிதந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் மற்றும் கியூ பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com