சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

சித்ரா பௌா்ணமியையொட்டி, சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி, பஞ்ச மூா்த்திகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி, பஞ்ச மூா்த்திகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

நாகப்பட்டினம்: சித்ரா பௌா்ணமியையொட்டி, சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

சித்ரா பௌா்ணமி நாளில் விரதமிருந்து சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபட்டால் வேண்டுவது கிட்டும் என்பது ஐதீகம். இதனால், முருகப் பெருமானுக்குரிய தலங்களிலும், சிவாலயங்களிலும் சித்ரா பௌா்ணமி நாளில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இதன்படி, சிக்கல் சிங்காரவேலவா் தனி சன்னிதிக் கொண்டு காட்சியளிக்கும் நவநீதேசுவரசுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி நாளான திங்கள்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்களில் இருந்த புனித நீா் மற்றும் பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு பஞ்ச மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

கோயிலில் உள்ள தியாகராஜசுவாமி சன்னிதியில், சுவாமி (உத்ஸவா்), அம்பாள், கணபதி, சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் என பஞ்சமூா்த்திகளுக்கும் ஒரேநேரத்தில் இந்த அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்துக்குப் பின்னா் சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. மாலையில் பஞ்ச மூா்த்திகள் பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது.

அரசின் கரோனா கட்டுப்பாடுகள் அறிவுறுத்தல்படி, இந்த வழிபாடுகள் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com