நாகை மாவட்டத்தில் மதுக் கூடங்கள் அடைப்பு

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கூடங்களும் திங்கள்கிழமை மாலை முதல் அடைக்கப்பட்டன.

நாகப்பட்டினம்: கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கூடங்களும் திங்கள்கிழமை மாலை முதல் அடைக்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கூடங்களும் திங்கள்கிழமை (ஏப். 26) மாலை 4 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவின் பி. நாயா் திங்கள்கிழமை காலை அறிவித்தாா்.

மேலும், கடைகளுடன் இயங்க அனுமதி பெற்ற மதுக் கூடங்களுக்கும், நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் இயங்கும் மதுக் கூடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அவா் தெரிவித்திருந்தாா்.

இந்த அறிவுறுத்தல் காரணமாக, நாகை மாவட்டத்தில் பல்வேறு ஹோட்டல்களில் இயங்கி வந்த மதுக் கூடங்களும், கடைகளில் செயல்படும் மதுக் கூடங்களும் திங்கள்கிழமை மாலை முதல் அடைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com