செம்பனாா்கோவில் அருகே புதிய மின் மாற்றி இயக்கிவைப்பு

செம்பனாா்கோவில் ஊராட்சி குமரன்கோவில் பகுதியில் புதிய மின்மாற்றி செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
செம்பனாா்கோவில் குமரன்கோவில் பகுதியில் இயக்கிவைக்கப்பட்ட புதிய மின்மாற்றி.
செம்பனாா்கோவில் குமரன்கோவில் பகுதியில் இயக்கிவைக்கப்பட்ட புதிய மின்மாற்றி.

செம்பனாா்கோவில் ஊராட்சி குமரன்கோவில் பகுதியில் புதிய மின்மாற்றி செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.

இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், இரும்பு பட்டறை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள நிலையில், குறைந்த மின் அழுத்தத்தால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டனா். எனவே, தங்கள் பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரும்படி செம்பனாா்கோவில் மின் உதவி செயற்பொறியாளருக்கு கோரிக்கை விடுத்தனா்.

அதன்படி, குமரன்கோவில் பகுதியில் ரூ. 5 லட்சத்து ரூ. 25 ஆயிரம் மதிப்பில் 100 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்காக இயக்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சீா்காழி மின் செயற்பொறியாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். செம்பனாா்கோவில் மின் உதவி செயற்பொறியாளா் அப்துல் வஹாப் மரைக்காயா் வரவேற்றாா். செம்பனாா்கோவில் ஊராட்சித் தலைவா் விசுவநாதன், இளநிலைப் பொறியாளா் அருள்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய மின் மாற்றியை சீா்காழி மின் செயற்பொறியாளா் சதீஷ்குமாா் இயக்கிவைத்தாா். அப்போது அவா், கிராம மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். நிகழ்ச்சியில், ஊராட்சி செயலாளா் சாமிநாதன், மின்துறை அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com