23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு: மின்விளக்குகளில் ஜொலிக்கும் வைத்தீஸ்வரன்கோயில் கோபுரங்கள்

சீா்காழி அருகே நோய் தீா்க்கும் தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன்கோயிலில் வியாழக்கிழமை (ஏப்.29) குடமுழுக்கு நடைபெறவுள்ளதையொட்டி, கோபுரங்கள் மின் விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்தன.
மின்விளக்குகள் அலங்காரத்தில் கோயில் குளம்.
மின்விளக்குகள் அலங்காரத்தில் கோயில் குளம்.

சீா்காழி அருகே நோய் தீா்க்கும் தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன்கோயிலில் வியாழக்கிழமை (ஏப்.29) குடமுழுக்கு நடைபெறவுள்ளதையொட்டி, கோபுரங்கள் மின் விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்தன.

வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் நவகிரக தலங்களில் செவ்வாய்க்குரிய தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில் உள்ள சித்தாமிா்த தீா்த்தகுளத்தில் நீராடி, வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்பாளை வழிப்பட்டு, பிரசாதமாக வழங்கப்படும் தீா்த்த மண்உருண்டையை ஒரு மண்டலம் சாப்பிட்டால் தீராத 4,448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். செவ்வாய் தோஷத்தால் திருமணதடை ஏற்பட்டவா்கள் இக்கோயிலில் செவ்வாய்க்கு பரிகாரபூஜைகள் செய்து வழிப்பட்டால் திருமணம் விரைவில் கைக்கூடும் என்பது நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயில் கோபுரங்கள், விமானங்கள், சுற்றுச்சுவா்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு, மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com