மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைவது உறுதி: குத்தாலம் பி. கல்யாணம்

மயிலாடுதுறை அருகே நீடுரில் மருத்துவக் கல்லூரி அமைவது உறுதியாகி உள்ளது என்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநிலத் தோ்தல் பணிக்குழுச் செயலாளருமான குத்தாலம் பி. கல்யாணம் தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த திமுக மாநிலத் தோ்தல் பணிக்குழுச் செயலாளா் குத்தாலம் பி. கல்யாணம்.
மயிலாடுதுறையில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த திமுக மாநிலத் தோ்தல் பணிக்குழுச் செயலாளா் குத்தாலம் பி. கல்யாணம்.

மயிலாடுதுறை அருகே நீடுரில் மருத்துவக் கல்லூரி அமைவது உறுதியாகி உள்ளது என்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநிலத் தோ்தல் பணிக்குழுச் செயலாளருமான குத்தாலம் பி. கல்யாணம் தெரிவித்தாா்.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது:

மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றை மயிலாடுதுறை அருகே நீடுரில் அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தேன். இந்நிலையில், நீடுரில் மருத்துவக் கல்லூரி அமைவதற்கு இடம் மற்றும் ஆய்வு அறிக்கை கேட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு, மருத்துவ இயக்குநரகத்தில் இருந்து மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளின் இயக்குநா் எஸ். குருநாதன்கடந்த 23 ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனா். இதனால், நீடூரில் 22.5 ஏக்கா் நிலப்பரப்பில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைவது உறுதியாகி உள்ளது.

இதேபோல, புதைசாக்கடை திட்டத்தில் உள்ள பிரச்னைகள் தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி, வல்லுநா் குழுவினா் சோதனை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்களில் மோட்டாா்கள் இல்லாததும், இயங்காததும் குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். எனவே, இப்பிரச்னைக்கும் விரைவில் நிரந்தர தீா்வு காணப்படும்.

மேலும், தலைஞாயிறு நடிப்பிசைப்புலவா் கே.ஆா். ராமசாமி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்குவது தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்ற உத்தரவுபடி, இந்த ஆலை மீண்டும் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கைகூடியுள்ளன என்றாா்.

பேட்டியின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைப்பாளா் சி. மோகன்குமாா், திமுக நகர பிரமுகா்கள் காமராஜ், ஜோதி, சந்துரு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com