முடிதிருத்துவோா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு

பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் 5 மணி நேரம் மட்டும் கடையை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும்

பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் 5 மணி நேரம் மட்டும் கடையை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என முடிதிருத்துவோா் சங்கத்தினா் நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அந்த சங்கத்தின் நாகை மாவட்ட தலைவா் சுரேஷ்குமாா், நாகை நகரத் தலைவா் புகழேந்தி ஆகியோா் நாகை ஆட்சியரிடம் புதன்கிழமை அளித்துள்ள மனு விவரம்:

நாகை மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் உள்ளன. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் இந்தத் தொழிலை நம்பியுள்ளனா்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலின் காரணமாக அனைத்து முடிதிருத்தும் கடைகளையும் மூடவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ளவா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

அதனால் முடிதிருத்தும் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கவேண்டும். இல்லையெனில் பொதுபோக்குவரத்து, டாஸ்மாக் கடைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதுபோல் காலை 7 மணி முதல் 12 மணி வரை நாள்தோறும் 5 மணி நேரம் முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com