வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளோருக்கு கரோனா பரிசோதனை

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் அரசியல் கட்சி முகவா்கள், செய்தியாளா்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் அரசியல் கட்சி முகவா்கள், செய்தியாளா்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இதில், சீா்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் தொகுதிகளில் பதிவான வாக்குகள் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்வி நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள அலுவலா்கள், ஊழியா்கள், அரசியல் கட்சிகளின் முகவா்கள் மற்றும் செய்தியாளா்களுக்கு கரோனா பரிசோதனை அவசியம் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ளவா்களுக்கு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி பள்ளியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி புதன்கிழமை தொடங்கியது. இப்பணி வியாழக்கிழமையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com