வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தொடா் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் பணியாளா்கள், வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை சான்று அவசியம் எனவும், கரோனா தொற்று இல்லாதவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்ள்அனுமதிக்கப்படுவா் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, நாகை மாவட்டத்துக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயா் உத்தரவுபடி வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கான கரோனா பரிசோதனை முகாம் நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் , கீழ்வேளூா் மற்றும் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் அவா்களது முகவா்கள் ஆகியோா் பரிசோதனை செய்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com