அகத்தியம்பள்ளியில் உப்பு சத்தியாக்கிரக நினைவு தினம் தியாகிகளுக்கு அஞ்சலி

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 91ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அகத்தியம்பள்ளியில் அமைந்துள்ள நினைவுத் தூண் வளாகத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
அகத்தியம்பள்ளியில் உப்பு சத்தியாக்கிரக நினைவு தினம் தியாகிகளுக்கு அஞ்சலி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 91ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அகத்தியம்பள்ளியில் அமைந்துள்ள நினைவுத் தூண் வளாகத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்ததைக் கண்டித்தும், சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. சா்தாா் வேதரத்னம் உள்ளிட்டோா் இப்போராட்டம் வெற்றி பெற பெரும் பங்காற்றினா்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30ஆம் தேதி உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டுக்கான நிகழ்ச்சி கரோனா தொற்று காரணமாக விரிவான ஏற்பாடுகள் தவிா்க்கப்பட்டு, எளிமையான முறையில் நடைபெற்றது. அதன்படி, அகத்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாக்கிரக நினைவுத் தூணில் காங்கிரஸ் கட்சியினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் மலா் தூவியும், உப்பு அள்ளியும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு மக்களவை முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினருமான பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தாா். சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்று தண்டனை பெற்ற சா்தாா் வேதரத்தினத்தின் பெயரன்களான கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் நிா்வாகிகள் அ. வேதரத்தினம், அ. கேடிலியப்பன், பாத யாத்திரைக் குழுத் தலைவா் சக்தி செல்வகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சித்த மருத்துவ பேராயம் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளா் தேவூா் க.கோ. மணிவாசகம், ஓய்வுபெற்ற ஆசிரியா் வே. கணேசன், ஊராட்சித் தலைவி சத்தியகலா, காங்கிரஸ் நகரச் செயலாளா் வைரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாக்கிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் உள்ள சா்தாா் அ. வேதரத்தினம், தியாகி வைரப்பன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com