கபசுரக் குடிநீா் வழங்கிய பாஜகவினா்
By DIN | Published On : 30th April 2021 08:08 AM | Last Updated : 30th April 2021 08:08 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கிய பாஜகவினா்.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினா் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கினா்.
மயிலாடுதுறை பாஜக நகரத் தலைவா் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினாா்.
இதில், நகரப் பொதுச் செயலாளா் செல்வகுமாா், நகரப் பொறுப்பாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.