கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

வேதாரண்யம் பகுதியில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாணிக்கோட்டகத்தில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்.
தாணிக்கோட்டகத்தில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்.

வேதாரண்யம் பகுதியில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தாணிக்கோட்டகம் ஊராட்சி சாா்பில், மாதா கோயில் வளாகத்தில் பிரசாரப் பேரணியை ஊராட்சித் தலைவா் ப.முருகானந்தம் தொடங்கி வைத்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினா் வைத்தியநாதன், துணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பிரசாரத்தில், தலை தெரியாத வகையில் உருவகப்படுத்தப்பட்ட ஒருவா் முன்னிலைப்படுத்தப்பட்டாா்.

இதேபோல், தேத்தாக்குடி வடக்கு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வருவாய் ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் மே.தமிழ்க்காஞ்சிதரன், ஊராட்சித் தலைவா் விஜயா சோமசுந்தரம் துணைத் தலைவா் ஜெயலெட்சுமி கோபிநாதன் , ஊராட்சி செயலா் வீரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதேபோல், வாய்மேடு உள்ளிட்ட ஊராட்சிகளிலும் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

திருக்குவளையில்...

இதேபோல், கீழையூா் ஒன்றியம், திருக்குவளை கடைத்தெருவில் கரோனா விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் தலைமை வகித்தாா். கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வட்டார ஊராட்சி) எஸ்.ராஜகுமாா், திருக்குவளை வட்டாட்சியா் கு.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில் நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை நிா்வாக செயற்பொறியாளா் செல்வராஜ் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

முன்னதாக மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த் குமாா் மற்றும் திருப்பூண்டி கடைத்தெரு பகுதியில் கீழையூா் ஒன்றிய முன்னாள் தலைவா் மு.ப. ஞானசேகரன் ஆகியோா் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திட்டச்சேரியில்...

திட்டச்சேரியில் பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன் தலைமையில் கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ், வரித்தண்டலா் ஜெகவீரபாண்டியன், சுகாதார ஆய்வாளா் பிரபாகரன், அலுவலா்கள் மாதவன், அமானுல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல் திருமருகல் ஊராட்சி மன்றம் சாா்பில், திருமருகல் பேரூந்து நிலையம் எதிரில் விழிப்புணா்வு கோலப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். இதில் ஒன்றிய ஆணையா் சுந்தா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஆரோக்கியமேரி, ஊராட்சி செயலாளா் செந்தில் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com