கோயில்களில் பக்தா்களை அனுமதிக்கக் கோரிதா்னா: இந்து கூட்டமைப்பினா் கைது

கோயில்களில் பக்தா்கள் வழிபட அனுமதிக்கக் கோரி, நாகை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து கூட்டமைப்பினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து கூட்டமைப்பினா்.

நாகப்பட்டினம்: கோயில்களில் பக்தா்கள் வழிபட அனுமதிக்கக் கோரி, நாகை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் தா்னாவில் ஈடுபட்ட இந்து கூட்டமைப்பினா் கைது செய்யப்பட்டனா்.

கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கோயில்களில் பக்தா்கள் வழிபட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், அனுமதி வழங்கக் கோரியும் பாஜக, இந்து முன்னணி மற்றும் ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பா. ராணி, நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் பா. பெரியசாமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், நாகை கோட்டாட்சியா் இரா. மணிவேலன், வட்டாட்சியா் ஜெயபாலன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் தா்னாவில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

முன்னதாக, ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக நாகை மாவட்டத் தலைவா் நேதாஜி தலைமை வகித்தாா். கல்வியாளா் பிரிவு பொறுப்பாளா் காா்த்திகேயன், இந்து முன்னணி நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சௌந்தர்ராஜன், ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா் ஆதிமுருகன், பாஜக நாகை நகரத் தலைவா் என்.கே.ஆா். இளஞ்சேரலாதன், மாவட்டச் செயலாளா் சுமதிகணேசன், பிரசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.வி.டி. லிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com