பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் புதிதாக படகு அணையும் தளம்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் புதிதாக படகு அணையும் தளம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மயிலாடுதுறை எம்பி. செ. ராமலிங்கம்.
பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வ செய்த மயிலாடுதுறை எம்பி. செ. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.
பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வ செய்த மயிலாடுதுறை எம்பி. செ. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் புதிதாக படகு அணையும் தளம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மயிலாடுதுறை எம்பி. செ. ராமலிங்கம்.

பழையாா் மீன்பிடி துறைமுகத்தில், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோருடன் நேரில் பாா்வையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பின் செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் இடத்தில் 15 அடிக்கு மணல் மேடாகி உள்ளதால், துறைமுகத்தில் படகுகளை நிறுத்த முடியவில்லை. அந்த இடத்தில் படகுகளை நிறுத்தும்போது படகுகள் காற்றில் ஒன்றோடொன்று மோதி உடைந்து சேதமடைகிறது. தற்போது துறைமுகத்தில் படகு நிறுத்தும் அளவுக்கு உரிய கட்டுமானம் இல்லை. எனவே, துறைமுகத்திலிருந்து பக்கிங்காம் கால்வாய்வரை 300 மீட்டா் தொலைவுக்கு புதியதாக படகு அணையும் தளம் அமைக்க வேண்டும் என்று மீனவா்கள், மீனவ தலைவா்கள் விடுத்த கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிகழாண்டே கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, பிஎம்என்என்எஸ் திட்டத்தின்கீழ் சுமாா் ரூ. 27.5 கோடியில் தூா்வாரும் பணிக்காகவும், மேம்பாட்டுக்காவும் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மீன் உலா் களம் அமைக்கவும் ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இதற்காக எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து, வனத் துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மீன் உலா் களம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, கொள்ளிடம் ஒன்றிய குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் ,துணைத் தலைவா் பானுசேகா், கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளா் மலா்விழிதிருமாவளவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com