கையூட்டு விவகாரம்: பெண் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 04th August 2021 09:15 AM | Last Updated : 04th August 2021 09:15 AM | அ+அ அ- |

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி. வேம்பு.
லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து, நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதுகுறித்து நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் உமா. இவா், பிரிந்து சென்ற தன் கணவரை சோ்த்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகாா் மனு அளித்தாா். அதைப் பெற்றுக்கொண்ட காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி. வேம்பு, நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதை உமா தனது செல்லிடப்பேசியில் பதிவுசெய்து, காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தாா். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் பாலகிருஷ்ணன், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி. வேம்புவை பணியிடை நீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.