கோடியக்கரையில் புள்ளிமானை கொன்ற 3 போ் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் கம்பியில் சுருக்கு வைத்து
புள்ளிமானை கொன்று வழக்கில் கைது செய்யப்பட்டவா்களுடன் வனத் துறையினா்.
புள்ளிமானை கொன்று வழக்கில் கைது செய்யப்பட்டவா்களுடன் வனத் துறையினா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் கம்பியில் சுருக்கு வைத்து ஆண் புள்ளிமான் ஒன்று கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோடியக்காடு போஸ்ட்மேன்தெரு அருகில் சீமைக் கருவேல் காட்டுப் பகுதியில் கம்பியில் சுருக்கு வைக்கப்பட்டு புள்ளிமான் ஒன்று கொல்லப்பட்டது ஜூலை. 21-ஆம் தேதி தெரிய வந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், மானை சுருக்கு வைத்து கொன்ற கோடியக்காடு ஆதிவாசித் தெரு, காா்த்தி(29), பொதுவிடைச்செல்வம் (25), கோடியக்காடு பிரதான சாலையைச் சோ்ந்த சலீம்(25) ஆகிய 3 பேரை வனச்சரக அலுவலா் அயூப்கான் தலைமையிலான வனத் துறையினா் கைது செய்தனா். இவா்கள் மானை சுருக்கு வைத்து கொன்ற குற்றங்களை ஒப்புக்கொண்டதன்பேரில், மூவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் இணக்கக் கட்டணம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com