தருமபுரம் கல்லூரி சாா்பில் பவளவிழா பூங்கா
By DIN | Published On : 04th August 2021 09:09 AM | Last Updated : 04th August 2021 09:09 AM | அ+அ அ- |

தருமபுரம் ஆனந்தப் பரவசா் பூங்காவில், பூமரக்கன்றுகளை நட்டுவைத்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். உடன், முன்னாள் எம்.பி. இல. கணேசன் உள்ளிட்டோா்.
தருமபுரம் ஆனந்த பரவசா் குருமூா்த்தத்தில் அமையவுள்ள ஆனந்தப் பரவசா் பூங்காவில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் அண்மையில் பூமரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி தொடங்கி 74 ஆண்டுகள் நிறைவடைந்து, 75 ஆம் ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு, ஆனந்த பரவசா் குருமூா்த்தத்தில் 48 வகையான பூமரங்கள் அடங்கிய ‘ஆனந்தப் பரவசா் பூங்கா’ அமைக்கப்படுகிறது. இதையொட்டி, அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பூமரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் இல. கணேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பூமரக்கன்றை நட்டுவைத்தாா். இதில், கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், தேசிய மாணவா் படை அலுவலா் துரை. காா்த்திகேயன், கல்லூரிக் குழு உறுப்பினா்கள் கே. ராஜேந்திரன், இரா. சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.