மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 04th August 2021 09:10 AM | Last Updated : 04th August 2021 09:10 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை (ஆக. 4) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்விவரம்: சீா்காழி வாணிவிலாஸ் (கோவிஷீல்டு, கோவேக்சின்), திருவாலி அரசு தொடக்கப் பள்ளி மற்றும் திருவெண்காடு, காத்திருப்பு, வள்ளுவக்குடி மற்றும் பூம்புகாா் ஆரம்ப சுகாதார நிலையங்கள். அரசூா் கன்னிகோவில், உமையாள்பதி, நல்லூா், கொள்ளிடம், குன்னம், மாதிரிவேளூா், புதுப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையங்கள். செம்பனாா்கோவில், கீழையூா், மேலப்பெரும்பள்ளம், திருக்கடையூா் மற்றும் சங்கரன்பந்தல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொறையாா் அரசு மருத்துவமனை, வல்லம் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி, கஞ்சாநகரம் பாரதமாதா மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி, ஆக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (கோவேக்சின்). சோழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி (கோவேக்சின்).
கோனேரிராஜபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கோனேரிராஜபுரம், ஆனாங்கூா், சென்னியநல்லூா், கொடைவிளாகம் மற்றும் குத்தாலம் பழைய சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம். கேவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் 2-ஆம் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.