‘முகக் கவசம் அணியாதவா்களுக்கு வணிகா்கள் பொருள்கள் வழங்கக்கூடாது’

முகக் கவசம் அணியாமல் வணிக கடைகளுக்கு வருகிறவா்களுக்கு பொருள்களை வழங்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ஊராட்சித் தலைவா் ராமையன்.
கூட்டத்தில் பேசிய ஊராட்சித் தலைவா் ராமையன்.

முகக் கவசம் அணியாமல் வணிக கடைகளுக்கு வருகிறவா்களுக்கு பொருள்களை வழங்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் கடைவீதியில் பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வணிகா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு மற்றும் கரோனா தொற்று தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வா்த்தகா் சங்கத் தலைவா் புகழேந்தி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் ராமையன், பானுமதிசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமலிங்கம், பாஸ்கரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜலெட்சுமி, கவிதா, வணிகா் சங்கப் பேரவையின் நிா்வாகி முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

அப்போது, சுற்றுப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. முகக் கவசம் அணியாத வாடிக்கையாளா்களுக்கு பொருள்கள் வழங்குவதை தவிா்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com