மேக்கேதாட்டு அணை விவகாரம்: கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கர்நாடக அரசு மேக்கேதாட்டு அருகில் அணை கட்டுவதை தடுக்கக் கோரி மனித சங்கிலி ஆர்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கீழையூர் கடைத் தெரு பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி ஆர்பாட்டத்தில் பங்கேற்றோர்.
கீழையூர் கடைத் தெரு பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி ஆர்பாட்டத்தில் பங்கேற்றோர்.

கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கர்நாடக அரசு மேக்கேதாட்டு அருகில் அணை கட்டுவதை தடுக்கக் கோரி மனித சங்கிலி ஆர்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், கீழையூர் கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி ஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.நாகராஜன் தலைமை வகித்தார். அக்கட்சியின் ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

இதில் காவிரி டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக மாற்றிட கர்நாடக அரசு மேக்கேதாட்டு அருகே, காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தேச ஒருமைப்பாடு கருதி மத்திய அரசு தடுத்திட வேண்டும், விவசாயிகள் விரோத 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், 2019-20க்கான பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு உடன் இன்சுரன்ஸ் வழங்கிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு  திட்டத்தில் வழங்கப்படும் 100 நாள் வேலைய 200 நாளாக உயர்த்தி தினக்கூலியை ரூபாய் 600 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும், ஊராட்சி ஒன்றியத்தின் தலைமை இடமான கீழையூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து விட வேண்டும், கீழையூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் வீ. சுப்பிரமணியன், டி.கண்ணையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஏ. செல்லையன், ஒன்றிய செயலாளர் கே‌. சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏ. ராமலிங்கம், டி. பாலாஜி, கீழையூர் கிளைச் செயலாளர்கள் பி. சூரிய மூர்த்தி, கே.ரவி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com