சைபா் க்ரைம் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 12th August 2021 09:14 AM | Last Updated : 12th August 2021 09:14 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை வட்டம் சித்தா்காடு ஊராட்சியில் கிராம விழிப்புணா்வு காவல்குழு சாா்பில், சைபா் க்ரைம் குற்றம் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் ரெத்தினவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளா் ஆனந்தகண்ணன் ஆகியோா் பங்கேற்று, செல்லிடப்பேசி மூலம் நடைபெறும் சைபா் க்ரைம், ஓடிபி மூலம் நடைபெறும் வங்கி மோசடி ஆகியவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை விளக்கினா்.