பொறையாறு கல்லூரியில் புதிய கட்டடம் திறப்பு
By DIN | Published On : 12th August 2021 09:28 AM | Last Updated : 12th August 2021 09:28 AM | அ+அ அ- |

பொறையாா் த.பே.மா.லு. கல்லூரியில் திறக்கப்பட்ட கூட்ட அரங்கு.
மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறில் த.பே.மா.லு. கல்லூரி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரி கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கூட்ட அரங்கை கல்லூரியின் தாளாளரும், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயருமான டேனியேல் ஜெயராஜ் திறந்து வைத்தாா்.
கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ், அட்கா கமிட்டி கன்வீனா் பொறியாளா் தியாகராஜன், ஆயா்கள் நவராஜ் ஆபிரகாம், ஜான்சன் மான்சிங், துணை முதல்வா்கள் ஜான்சன் ஜெயக்குமாா், ஜோயல் எட்வின்ராஜ் மற்றும் பேராசிரியா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.