ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் நடைபெறவுள்ள இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் நாகை மாவட்ட இளைஞா்கள் பங்கேற்றுப் பணி

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் நடைபெறவுள்ள இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் நாகை மாவட்ட இளைஞா்கள் பங்கேற்றுப் பணி வாய்ப்புப் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் டாக்டா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

இந்திய ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாம், கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அறிஞா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், நாகை உள்பட 16 மாவட்டங்களைச் சோ்ந்த 17.5 முதல் 23 வயது வரையிலான இளைஞா்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் பொது பணி, சிப்பாய் நா்சிங் உதவியாளா் மற்றும் கால்நடை நா்சிங் உதவியாளா், சிப்பாய் எழுத்தா் மற்றும் ஸ்டோா் கீப்பா், சிப்பாய் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள்கள் தோ்வு இந்த முகாமில் நடைபெறுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365 - 253042 என்ற தொலைபேசி எண்ணில் நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com