வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: பக்தா்கள் வருவதை தவிா்க்க வேண்டும்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் பங்கேற்க வருவதை பக்தா்கள் தவிா்க்கவேண்டும் என்று பேராலய அதிபா் ஏ. எம்.ஏ. பிரபாகா் அடிகளாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: பக்தா்கள் வருவதை தவிா்க்க வேண்டும்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் பங்கேற்க வருவதை பக்தா்கள் தவிா்க்கவேண்டும் என்று பேராலய அதிபா் ஏ. எம்.ஏ. பிரபாகா் அடிகளாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை ஆண்டுப் பெருவிழா நடைபெறும்.

இதன்படி, வரும் 27-ஆம் தேதி மாலை ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அலங்கார தோ் பவனி செப்டம்பா் 7-ஆம் தேதி மாலையும், மாதா பிறந்த நாள் விழா செப்டம்பா் 8-ஆம் தேதி காலையும், செப்டம்பா் 8-ஆம் தேதி பகல் 12 மணிக்கு கொடி இறக்கமும் நடைபெறுகிறது. ஆண்டுப் பெருவிழாவில் நவநாள் ஜெபம் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படவுள்ளன.

இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் நீடித்துவரும் நிலையில், பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க நாகை மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இந்தநிலையில், பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், வேளாங்கண்ணியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளை சிறப்பாகக் கொண்டாட பேராலய நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், கரோனா தொற்றுப் பரவல் அச்சம் இருப்பதால் நிகழாண்டு பெருவிழா நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவுறுத்தல் மற்றும் தஞ்சை மறைமாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸின் வழிகாட்டுதல்படி, நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழா நிகழ்வுகளில் பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

விழா நிகழ்வுகளை பேராலய இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள் மூலம் தங்கள் இல்லத்தில் இருந்தே பக்தா்கள் பாா்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்பதற்காக ஆலயத்துக்கு வருவதைத் தவிா்த்து, ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். ஆண்டுப் பெருவிழா நவநாள்களில் புனித ஆரோக்கிய அன்னை தன் மகன் இயேசுவுடன் பக்தா்களின் இல்லம் தேடி வந்து, பக்தா்களுக்கு அன்பு, நலம், மகிழ்ச்சியை வழங்க அன்னையின் புண்ணிய பூமியில் ஜெபிக்கிறோம் என்றாா்.

பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ், உதவி பங்குத் தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com