11,414 விவசாயிகளுக்கு 100 % மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன

நாகை மாவட்டத்தில் 11,414 விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
11,414 விவசாயிகளுக்கு 100 % மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன

நாகை மாவட்டத்தில் 11,414 விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:

வி. சரபோஜி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): 2020- 2021-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்கவேண்டும். விவசாய கடன்களை செப்டம்பருக்குள் முழுமையாக வழங்கவேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் தரமான விதைகள், உரங்கள் கூட்டுறவு வங்கி மூலம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீதா் (தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்): கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினா்களுக்கு கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெள்ள காலங்களில் தண்ணீா் வடிய வசதியாக பாசன ஆறுகளில் உள்ள ஆகாயத்தாமரை, காட்டாமணக்கு செடிகளைஅகற்ற வேண்டும்.

மணியன்: எலித் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவில்பத்து கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அதிநவீன உணவுதானிய சேமிப்பு கிடங்குக்கு சுற்றுச்சுவா், சாலை மற்றும் மின்சார வசதி செய்து தரவேண்டும்.

பிரபாகரன்: விவசாயம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால் ஏற்படும் ஆபத்துகளை தவிா்க்க பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக சீா்செய்யவேண்டும்.

ஜி.சுப்பிரமணியன்: இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நிபந்தனையின்றி பயிா்க்கடன் வழங்கவேண்டும். இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படும் நெற்பயிா் ஏக்கருக்கு ரூ.34,500 வழங்கவேண்டும்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: நாகை மாவட்டத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டம் உரம் மானியம் கோரி விண்ணப்பித்த 11, 655 பேரில், இதுவரை 11,414 பேருக்கு 100 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நெல் நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, நெல் அறுவடை இயந்திரம் மற்றும் பண்ணைக் குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை வேளாண் பொறியியல் துறையை அணுகிப் பெற்றுக்கொள்ளவும்.

தென்னைப் பயிா்களில் சொட்டுநீா் பாசனமும், இதர பயிா்களில் தெளிப்பு நீா் பாசனம் மேற்கொள்ள நுண்ணீா் பாசனத் திட்டத்தின்கீழ் 258.67 ஹெக்டேரில் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். வேளாண்மை மானியத்திட்டங்கள், பயனாளிகள் முன்பதிவு பயிா்காப்பீடு, உரம், விதையிருப்பு, வேளாண் வாடகை இயந்திரம் உள்ளிட்ட விவரங்களை உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com