மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மனு

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. செந்தில்குமாா், நகரப் பொறுப்பாளா்கள் சண்முநாதன், தவமணி உள்ளிட்டோா் அளித்த மனு: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்கவேண்டும், தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தவேண்டும், தனியாா் நிறுவனங்களில் 5 சதசவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமருகல்: இதேகோரிக்கையை வலியுறுத்தி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்க மாவட்ட குழு உறுப்பினா் லெலின், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், தவமணி, பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகேயுள்ள காட்டுச்சேரியில் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஜி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், இலுப்பூரில் சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய பொருளாளா் ஆனந்தராஜ், ஒன்றிய துணைத் தலைவா் லெட்சுமி, துணைச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்குவளை: கீழையூா் ஒன்றிய அலுவலகம் முன் சங்கத்தின் ஒன்றிய செயலாளா் என். பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்ட முடிவில், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊ) எஸ். ராஜகுமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

வேதாரண்யம்: வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com