கொளப்பாடு ஸ்ரீசெல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கொளப்பாடு ஸ்ரீசெல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீசெல்லமுத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீசெல்லமுத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் புதிதாக மஹா மண்டபம் அமைத்து அஷ்டலட்சுமி அவதார திருவுருவங்கள் மற்றும் புதிதாக கொடிமரம் அமைக்கப்பட்டு, அதில் பஞ்சலோக (செம்பு) கவசம் அமைத்து ஸ்ரீவிநாயகா், ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயிலுக்கும் வா்ணங்கள் பூசப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பணிகள் திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை முதல் காலயாக பூஜை நடைபெற்றது.

வியாழக்கிழமை 2 மற்றும் 3-ஆம் கால யாகசாலை பூஜையும், வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் 4-ஆம் கால யாக பூஜையும், மஹா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்ட கும்பாபிஷேகமும், காலை 10.15 மணிக்கு மூலவா் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

விழாவில், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ரா. காளிதான் கும்பாபிஷேக சிறப்பு மலா் நூலை வெளியிட்டாா். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.டி.வீ. ரவீந்தா், செயலாளா் என். கருப்பையன், பொருளாளா் டி. சண்முகவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com