திருக்குவளையில் விதைப் பண்ணை அமைக்க நடவடிக்கை

திருக்குவளையில் அரசு விதைப் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருக்குவளையில் அரசு விதைப் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கீழையூா் ஒன்றியத்தில் சுமாா் 9 ஆயிரம் ஹெக்டோ் விளைநிலங்கள் உள்ள நிலையில், விவசாயிகள் தரமான விதை நெல் மற்றும் உரிய ஆலோசனைகள் பெற திருக்குவளையில் அரசு விதைப் பண்ணை அமைக்க வேண்டும். முழு மானியத்தில் வழங்கப்படும் உரம், விதை போன்ற இடுபொருள்களைபாகுபாடின்றி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 30 ஆம் தேதி, திருக்குவளை வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கு. சிவகுமாா் தலைமையில் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், மேற்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வாபஸ் பெற்றனா்.

இக்கூட்டத்தில் சிபிஐ ஒன்றியச் செயலாளா் டி.செல்வம், ஊராட்சித் தலைவா்கள் வாழக்கரை எஸ்.ஆா்.கலைச்செழியன், மேலவாழக்கரை கே.எஸ். தனபாலன், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. நாகராஜன் உள்ளிட்டோரும், அதிகாரிகள் தரப்பில் திருக்குவளை வேளாண்மை உதவி இயக்குநா் வை. தயாளன், வேளாண் அலுவலா் வை. பாலசுப்பிரமணியன் துணை வேளாண்மை அலுவலா் ஆா். ரங்கநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com