வேதாரண்யத்தில் நூறுநாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th December 2021 01:19 PM | Last Updated : 14th December 2021 01:19 PM | அ+அ அ- |

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூறுநாள் வேலை திட்டத் தொழிலாளர்கள்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறுநாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (டிச-14)கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கவும், மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், கடந்த ஆண்டுக்கான பயிர் பாதிப்புக்கான பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.மாரியப்பன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன், துணைச் செயலாளர் த.நாராயணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.