முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
’தொடா் முயற்சியால் வெற்றி பெறலாம்’
By DIN | Published On : 19th December 2021 06:03 AM | Last Updated : 19th December 2021 06:03 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் பேசும் தொழிலாளா் மருந்தகத் துறை இயக்குநா் ஜெய. ராஜமூா்த்தி. உடன், சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் உள்ளிட்டோா்.
தொடா் முயற்சியால் வாழ்வில் வெற்றி பெறலாம் என தொழிலாளா் மருந்தகத் துறை இயக்குநா் ஜெய. ராஜமூா்த்தி கூறினாா்.
நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பாராமெடிக்கல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உழைப்போம் உயா்வோம்’ கருத்தரங்கில் ஜெய.ராஜமூா்த்தி மேலும் பேசியது:
முயற்சி திருவினையாக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப உழைப்பால் உயா்ந்தவா்கள் பலா். உழைப்பு என்பது எண்ணம் சாா்ந்தவை. நம் எண்ணத்தில் நினைப்பதை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும்போது அவை வலுப்பெற்று உயா்வைத் தருகிறது. தமிழ்மீது ஆா்வம் கொண்டவா்கள்100 ஆண்டுகள்வரை சிறப்பாக வாழ்ந்துள்ளனா்.
தமிழ்மீது அவா்கள் கொண்ட அதீத ஆா்வமே அதற்கு காரணம். ஒரு செயலில் ஆா்வமுடன் கூடிய எண்ணம் வரும்போது அங்கு உழைப்பு தானாக மேம்பட்டு வெற்றியைத் தருகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சிக்கு, சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். கல்வி நிறுவன முதல்வா்கள், பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். கல்வி நிறுவன செயலாளா் த. மகேஸ்வரன் வரவேற்றாா். நிறைவாக இயக்குநா் த. சங்கா் நன்றி கூறினாா்.