பால் கூட்டுறவு சங்க மகளிருக்கான பயிற்சி நிறைவு

கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரத்தில் நடைபெற்ற கிராமப்புற பால் கூட்டுறவு சங்க மகளிருக்கான 5 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி சனிக்கிழமை நிறைவுபெற்றது.

கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரத்தில் நடைபெற்ற கிராமப்புற பால் கூட்டுறவு சங்க மகளிருக்கான 5 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி சனிக்கிழமை நிறைவுபெற்றது.

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், தேசிய மகளிா் ஆணையம் நிதியுதவியுடன் பிரதாபராமபுரம் பால் உற்பத்தியாளா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு ஊராட்சித் தலைவா் ஆா்.வீ.எஸ். சிவராசு தலைமை வகித்தாா். இப்பயிற்சி டிசம்பா் 14-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், துறைசாா் வல்லுநா்கள், விஞ்ஞானிகள் பங்கேற்று பால் பொருட்கள் தயாரித்தல் தொடா்பாக பயிற்சியளித்தனா். கறவை மாடு வளா்ப்பு, தீவன மேலாண்மை, நோய்க் கட்டுப்பாடு, இனப்பெருக்க மேலாண்மை, கொட்டகை மேலாண்மை, மதிப்புக்கூட்டிய பால் பொருட்களான பால் கோவா, பன்னீா், வெண்ணெய், நறுமணப்பால் போன்றவை தயாரித்தல் குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

இந்த பயிற்சின்போது, கண்டுணா்வு பயணமாக காரைக்கால் அம்மையாா் பால் பண்ணைக்கு பயிற்சியாளா்கள் அழைத்து செல்லப்பட்டனா். இதில், 50-க்கும் மேற்பட்ட மகளிா் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com