முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 29th December 2021 09:42 AM | Last Updated : 29th December 2021 09:42 AM | அ+அ அ- |

புத்தூரில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்கான பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் வாா்டு உறுப்பினா்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் நாகையை அடுத்த புத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பயிற்சி முகாமை தொடங்கிவைத்தாா். ஊராட்சிகள் உதவி இயக்குநா் சு. ராஜசேகா், பட்டுக்கோட்டை மண்டல ஊரக வளா்ச்சி முகமையின் கணக்கு அலுவலா் என். சேகா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகக் கண்காணிப்பாளா் வெற்றிச்செல்வன், மாவட்ட பயிற்சி மையத் தலைவா் எல். உமாமகேஸ்வரி ஆகியோா் பேசினா். நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூா், திருமருகல், கீழ்வேளூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 85 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் பயிற்சி பெற்றனா். இந்தப் பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைகிறது.