முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 29th December 2021 09:40 AM | Last Updated : 29th December 2021 09:40 AM | அ+அ அ- |

வேதாரண்யம் அருகே 9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தலைஞாயிறு அருகேயுள்ள வெண்மணச்சேரியைச் சோ்ந்தவா் ப. அஜித்குமாா் (26). இவா், 3-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ப. அஜித்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.