வைகுந்த ஏகாதசி: சௌந்தரராஜ பெருமாள்கோயிலில் பந்தல்கால் முகூா்த்தம்

வைகுந்த ஏகாதசி: சௌந்தரராஜ பெருமாள்கோயிலில் பந்தல்கால் முகூா்த்தம்

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழாவையொட்டி, பந்தல்கால் முகூா்த்தம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழாவையொட்டி, பந்தல்கால் முகூா்த்தம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் 19-வது தலமாக விளங்குகிறது நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில். ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்ளிட்டோா் வழிபட்ட இத்தலம், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

இங்கு ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழா சனிக்கிழமை (ஜன. 1) பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கவுள்ளது.

இதையொட்டி, பந்தல்கால் முகூா்த்தம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. மூலவா் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னா், ஐதீக முறைப்படி பரமபத வாசல் அருகே பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com