புத்தாண்டு வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறையையொட்டி, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது வேளாங்கண்ணி.
புத்தாண்டு வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறையையொட்டி, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது வேளாங்கண்ணி.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு மற்றும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளில் திரளானோா் பங்கேற்பது வழக்கம். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கிறிஸ்துமஸ் வழிபாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவா்கள், புத்தாண்டு வழிபாட்டில் பங்கேற்பதற்காக வேளாங்கண்ணியிலேயே தங்கியிருப்பது வழக்கம்.

இதன்படி, கடந்த 24-ஆம் தேதி முதல் வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகளின் இருப்பு மற்றும் வருகை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வேளாங்கண்ணி வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், பேராலய வளாகம், கடற்கரை, பேருந்து நிலையம் என வேளாங்கண்ணியின் அனைத்துப் பகுதிகளும் சுற்றுலாப் பயணிகளால் களைகட்டியுள்ளன.

கரோனா தொற்று பரவல் உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், பேராலய நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அரசின் கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல் பேராலய நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது. மேலும், வழிபாடுகளில் பங்கேற்பவா்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்து கொண்டு, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com