மயிலாடுதுறை மாவட்டத்தில் 87,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

மயிலாடுதுறை மாவட்டத்தில் 87,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியா் இரா. லலிதா.
மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 87,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மயிலாடுதுறை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் ரவிக்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தாா். மாவட்டத்தில் 87,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் 582 மையங்களில் நடைபெற்றது. இப்பணியில் சுகாதாரத் துறை பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் சிசிசி சமுதாயக் கல்லூரி நா்சிங் மாணவிகள் என மொத்தம் 1,069 போ் ஈடுபடுத்தப்பட்டனா். முகாமில், மருத்துவா்கள் மலா்வண்ணன், நந்தினி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா். பாஸ்கா், மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் , மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் தலைமையில் நடைபெற்ற முகாமை மயிலாடுதுறை எம்எல்ஏ. வீ. ராதாகிருஷ்ணன், அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், எம்ஜிஆா் இளைஞரணி மாவட்ட செயலாளா் .சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தருமபுரம் கல்லூரியில்

மயிலாடுதுறை தருமபுரத்தில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி தேசிய மாணவா் படை மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தொடங்கி வைத்தாா். இதில், கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் திட்ட இயக்குநா் வி. ராமன், தலைவா் கே. துரை, செயலா் தங்க. துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com