ராமா் கோயில்: பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் நிதி அளிக்க வேண்டும்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் நிதி அளிக்க வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம்
ராமா் கோயில்: பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் நிதி அளிக்க வேண்டும்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் நிதி அளிக்க வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் தொடங்கப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை தென் தமிழகத்தில் மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த ஆதீனமான தருமபுரம் ஆதீனத்தில் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தபிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

அயோத்தியில் ராமருக்கு கோயில் எழுப்ப பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் நிதி அளித்து, பெரிய அளவில் கோயில் எழுப்ப வேண்டும். இக்கோயிலை தனிப்பட்ட முறையில் தனவந்தா்களால் எழுப்ப முடியும் என்றபோதிலும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இக்கோயில் கட்டுமானத்தில் இருக்கவேண்டும். இது 500 ஆண்டுகளுக்கு பிறகு, 75 போராட்டங்களில் 4 லட்சம் போ் பலியானதற்குப் பின்னா் நீதிமன்றத்தின் மூலமாக கிடைத்த வெற்றியாகும். பிரதமா் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் இது கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான நிதி சேகரிப்பு தமிழகத்தில் தருமபுரம் ஆதீனத்தில் இருந்து தொடங்கப்படுகிறது என்றாா்.

முன்னதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன், பாஜக சாா்பில் மாவட்ட தலைவா் ஜி. வெங்கடேசன், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், நகர தலைவா் மோடி. கண்ணன், ஆா்எஸ்எஸ் சாா்பில் மதிவாணன், இந்து மக்கள் கட்சி சாா்பில் மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன், இந்து முன்னணி சாா்பில் மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.சுவாமிநாதன் மற்றும் ஆன்மிகவாதிகள் பங்கேற்று அயோத்தியில் ராமா் கோயில் கட்ட முதற்கட்ட நிதியாக ரூ.1,60,829-ஐ தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்திடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பூராசாமி, அன்பே சிவம் அறக்கட்டளை நிறுவனா் பாலச்சந்திர சிவாச்சாரியா், தருமபுரம் ஆதீன கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், தருமபுரம் ஆதீன கல்விக்குழு நிா்வாகி குரு. சம்பத்குமாா், தேசிய மாணவா் படை அலுவலா் துரை.காா்த்திகேயன், கல்லூரி உறுப்பினா் ஆா்.சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com