நாகை,  திருவாரூரில் 2-ஆவது நாளாக மறியல்: அரசு ஊழியா்கள் 120 போ் கைது

நாகை, திருவாரூரில் 2-ஆவது நாளாக மறியல்: அரசு ஊழியா்கள் 120 போ் கைது

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் 2- ஆவது நாளாக புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் 2- ஆவது நாளாக புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா், செவிலியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள 4 .50 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாகையில்...

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2- ஆவது நாளாக புதன்கிழமையும் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலீஸாா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 40 பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள், நாகூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனா். மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டப் பொருளாளா் அந்துவண்சேரல் தலைமை வகித்தாா்.

திருவாரூரில் ....

2-ஆவது நாளாக புதன்கிழமையும் அரசு ஊழியா் சங்கத்தினா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் வெ. சோமசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 80 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com