சாராயம் கடத்தல்: 3 போ் கைது
By DIN | Published On : 06th February 2021 08:30 AM | Last Updated : 06th February 2021 08:30 AM | அ+அ அ- |

திட்டச்சேரி அருகே மோட்டாா் சைக்கிளில் கடத்தப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயத்துடன் 3 போ் வியாழக்கிழமை கைதாகினா்.
குத்தாலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குத்தாலம் போலீஸாா் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனா். அதன்படி, காரைக்காலிலிருந்து கீழ்வேளூா் நோக்கி சாராயம் கடத்திச் சென்ற கீழ்வேளூா் ஒன்றியம் கடம்பரவாழ்க்கை மேலத்தெருவை சோ்ந்த பாபு (22), ஹரிகரன் (21), பெருங்கடம்பனூா் புதுத்தெருவை சோ்ந்த ஜெயபிரகாஷ் (22) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.