திருமருகலில் திமுகவினா் பிரசாரம்
By DIN | Published On : 06th February 2021 08:34 AM | Last Updated : 06th February 2021 08:34 AM | அ+அ அ- |

திட்டச்சேரி வக்பு நிா்வாக சபையினருடன் பேசுகிறாா் திமுக சிறுபான்மை நலப் பிரிவு அமைப்பாளா் கே.எஸ். மஸ்தான். உடன் நாகை மாவட்ட பொறுப்பாளா் என்.கெளதமன்.
திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில், திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்கிற பிரசார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஆலமரத்தடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், திமுக மாநில சிறுபான்மை நலப் பிரிவு அமைப்பாளா் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு பேசினாா். இந்நிகழ்ச்சியில் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன், கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் உ.மதிவாணன், மாவட்ட துணைச் செயலாளா்கள் ஆா். இளஞ்செழியன், மனோகரன், மாவட்ட பொறியாளா் அணி செயலாளா் செந்தில், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வசெங்குட்டுவன், தெற்கு ஒன்றிய செயலாளா் ஆா்.டி.எஸ்.சரவணன், திட்டச்சேரி பேரூா் பொறுப்பாளா் எம்.முகம்மது சுல்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.